புதிய தலைமைச் செயலகம் எங்கே தெரியுமா? தமிழக அரசு அரசாணை வெளியீடு!



new-secratary-office-pattinampakkam

தமிழ்நாட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகம் அமைக்கும் திட்டத்துக்கு அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவையில் கடந்த செப்.3-ம் தேதி முதல்வர் விஜய் சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனையடுத்து புதிய வளாகத்துக்கான இடம் தொடர்பாக பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தற்போது பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் உள்ள நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Secretary office

இதையும் படிங்க: அதிர்ச்சி! திடீரென மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் விஜய்....!!!

இந்தத் திட்டத்துக்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட பகுதிகளை பொதுத்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தமாக சுமார் 25 முதல் 26 ஏக்கர் பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிர்வாக நடவடிக்கைகள், கட்டட வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக வெளியான அரசாணை நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிர்ச்சி! பள்ளிப் பேருந்து மீது கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து!!!