அதிர்ச்சி! திடீரென மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் விஜய்....!!!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று திடீரென சென்றார். சித்தரஞ்சன் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அவர் சென்ற தகவல் பரவியதும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
திடீர் மருத்துவமனை பயணம்
விஜய் மருத்துவமனைக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள், அவரை பார்ப்பதற்காக அப்பகுதியில் கூடினர். இதையடுத்து மருத்துவமனை அமைந்துள்ள சித்தரஞ்சன் சாலையில் பொதுமக்கள் நடமாட்டமும் அதிகரித்தது. பின்னர் நிலைமை வழக்கமான நிலைக்கு திரும்பியது.
இதையும் படிங்க: அவசரப்பட்டுடோமோ... ஆலோசனையே இல்லாமல் இப்படி ஒரு முடிவு! கசிந்த சீக்ரெட்.... பரபரப்பில் அரசியல் களம்!!!
வழக்கமான பரிசோதனைக்காக சென்றதாக தகவல்
விஜய் வழக்கமான உடல்நிலை பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்றதாக சில நாளிதழ்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அவர் மருத்துவமனைக்கு சென்றதற்கான காரணம் குறித்து விஜய் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
அதிகாரப்பூர்வ தகவலுக்காக எதிர்பார்ப்பு
இதனால் விஜயின் மருத்துவமனை வருகை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், விஜய் மருத்துவமனை பயணம் தொடர்பான முழுமையான விவரம் அவரது தரப்பில் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவலுக்குப் பிறகே உறுதியாகும்.
இதையும் படிங்க: என்னயா நடக்குது இங்க....காரசாரமான விவாதத்தின் போது எ.வ.வேலு சொன்ன அந்த ஒரு வார்த்தை...! குலுங்கி சிரித்த CM விஜய்...! வைரலாகும் வீடியோ...!!!