அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்.! கொஞ்சம் பொறுத்திருங்கள்.! ரஜினிகாந்த்

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்.! கொஞ்சம் பொறுத்திருங்கள்.! ரஜினிகாந்த்


rajini-talk-about-party

கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும் நடிகர் ரஜினிகாந்த்,  அரசியல் கட்சி துவக்க மாட்டார் என, சமூக வலைதளங்களில் அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுப்பு தெரிவித்தார் ரஜினிகாந்த். மேலும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை எனவும் ஒப்புக் கொண்டார்.

தாம் முதல்வராகாமல் வேறு ஒருவரை முதல்வராக்குவேன். எம்ஜிஆரைப் போல நல்லாட்சி தருவோம் என்றெல்லாம் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ஆனால் ரஜினிகாந்த் கட்சியையே தொடங்காத நிலை நீடித்ததால், ரஜினி  கட்சி துவக்குவாரா.? மாட்டாரா.? என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. இந்தநிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக, அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என டுவிட்டர் வாயிலாக  ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

rajini

இதனையடுத்து, சென்னை கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். அங்கு, மாவட்டச் செயலாளர்களின் நடவடிக்கைகள் தனக்கு திருப்தியாக இல்லை என்றும், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள் என்று கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.