உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை!

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை!


rain-in-tamilnadu-UK3TBW

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதன் காரணமாக தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும். 5 நாள் கனமழை பெய்யும் என்பதால் கேரளா, கர்நாடகாவிற்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் குஜராத், மகாராஷ்டிராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain

இதன்காரணமாக  தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், தென் கிழக்கு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கடலோர பகுதி, அந்தமான் நிக்கோபார் கடலோர பகுதிகளுக்கு அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.