மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் காரில் சென்ற காவலர்..! எதிரே வந்த ஜேசிபி இயந்திரம்..! நொடியில் சிதைந்த வாழ்க்கை..! நெஞ்சை உலுக்கும் விபத்து..! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் காரில் சென்ற காவலர்..! எதிரே வந்த ஜேசிபி இயந்திரம்..! நொடியில் சிதைந்த வாழ்க்கை..! நெஞ்சை உலுக்கும் விபத்து..!

புதுக்கோட்டை அருகே நடந்த கார் விபத்தில் காவலர் மரணம். காரில் இருந்த மனைவி மற்றும் குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காவலர் மனோ(30) திருச்சியில் காவலராக பணியாற்றிவந்தநிலையில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேற்று காரில் புறப்பட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

கார் திருச்சி  - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்மாசத்திரம் என்ற பகுதி அருகே சென்றபோது எதிரேவந்த ஜேசிபி இயந்திரத்துடன் கார் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் காரை ஒட்டிய காவலர் மனோ சம்பவ இடத்திலையே உடல் சிதறி பலியாகியுள்ளார்.

காரில் இருந்த மனைவி மற்றும் ஒருவயது குழந்தை இருவரும் பலத்த காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கீரனூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo