ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஒரு பழைய மாளிகையில், வாடகைக்கு இருந்த குடும்பத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் 60 வயது உரிமையாளர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வருடமாக நடந்த கொடுமை
தகவலின்படி, அந்த இளம் பெண் கடந்த ஒரு ஆண்டாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். பயம் காரணமாக யாரிடமும் சொல்லாமல் மௌனமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அக்கா கதவை திற ரொம்ப பயமா இருக்கு! கதவை உடைத்து பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி.. கன்னியாகுமரியில் நடந்த பயங்கரம்!
கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததாக குற்றச்சாட்டு
அந்த பெண் ஏழு மாத கர்ப்பமாக இருந்த நிலையில், கர்ப்பத்தை மறைக்க வீட்டின் உரிமையாளர் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கால், பெண்ணும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்ததாக ஆரம்ப தகவல்கள் கூறுகின்றன.
புகாரின் பேரில் கைது
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். குற்றச்சாட்டில் தொடர்புடைய முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி.... வளர்ப்பு தாய் பாராமரிப்பில் இருந்த சிறுவன் குழியில் தொட்டியில் மூழ்கி மரணம்!