தமிழகம்

தமிழன் பிரசன்னா சொன்ன ஒத்த வார்த்தை.! தற்கொலை செய்துகொண்ட அவரது மனைவி.!

Summary:

திமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னா, தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமான

திமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னா, தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமானவர். இவர் சென்னை வியாசர்பாடியை அடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி நதியா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு 2 மகளும், 1 வயது மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நதியாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று கணவர் பிரசன்னாவிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழன் பிரசன்னா ஊரடங்கு நேரத்தில் ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு மனைவியிடம் கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நதியா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நதியா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரசன்னா அவரை மீட்டு, காரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு நதியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement