தமிழகம்

ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

police suicide in vilupuram


விழுப்புரம் ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாக காவல்துறையில் உள்ளவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வபோது நடந்து வருகிறது. 

அந்தவகையில், விழுப்புரம் மாவட்டம் காக்குப்பம் ஆயுதப்படை  குடியிருப்பு வளாகத்தில் 2 ஆம் நிலை காவலர் ஏழுமலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் காவலர் ஏழுமலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக காவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சமப்வம் குறித்த செய்தி அறிந்தவுடன் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட காவலரின் உடலை  பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஏழுமலையின் செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


 


Advertisement