நடு ரோட்டில் வெட்டி சாய்க்கப்பட்ட போலீஸ்காரரின் மகன்! வெளியான பகீர் காரணம்.



Police son killed in madurai for love marriage issue

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் காவல் துறை அதிகாரி பூமிநாதன். இவர் சமீபத்தில் உயிர் இழந்ததை அடுத்து அவரது மனைவி வாரிசு அடைப்படையில் மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கிளார்க் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது மகன் கோபால் சாமி என்பவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தல்லாகுளம் பகுதியில் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்னனர். இதுபற்றிய முதல் கட்ட விசாரணையில் சில நாட்களுக்கு முன்னர் கோபால் சாமி தனது நண்பர் ஒருவருக்கு காதல் திருமணம் செய்து வைத்ததாகவும், இதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

Crime

மேலும், அந்த பகுதியில் நடைபெறும் பைக் திருட்டு பற்றி கோபால் சாமி காவல்துறைக்கு துப்பு கொடுத்து வந்ததாகவும், இதன் காரணமாக கூட மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்னனர்.