ஒரே வீடியோவில் ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம்பிடித்த தமிழ்நாடு காவலர்.! இவருதான்யா மக்களின் நண்பன்.!

ஒரே வீடியோவில் ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம்பிடித்த தமிழ்நாடு காவலர்.! இவருதான்யா மக்களின் நண்பன்.!



police-helped-old-women

பொதுவாக நீண்ட தூரம் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகள், அவர்களது ஹெல்மட்டின் மேல்புறம் கேமராவை வைத்து பயணிப்பது வழக்கம். அந்த வகையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அருண் என்ற வாலிபர் ஒருவர், தமிழகத்தில் நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

அதாவது, அருண் அவருடைய இருசக்கர வாகனத்தில் தென்காசிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது காவலர் ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அவரிடம் நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவரா எனக் கேட்டு, உங்களுக்கு முன்பு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருக்கிறது, அதில் உள்ள அம்மா ஒருவர் இந்த மருந்து பாட்டிலைத் தவறவிட்டுவிட்டார். எனவே நீங்கள் அந்த பேருந்தை முந்திச்சென்று பேருந்தில் செல்லும் அந்த அம்மாவிடம் இந்த மருத்து பாட்டிலைக் கொடுத்து விடுங்கள் என கூறியுள்ளார்.

இதனையடுத்து அருண் அந்த மருந்து பாட்டிலைப் பெற்றுக்கொண்டு காவலர் சொன்ன அந்த பேருந்தை முந்திச்சென்று, பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் தன்னிடம் இருந்த மருந்து பாட்டிலை அந்த அம்மாவிடம் கொடுத்து, நீங்கள் தவற விட்டுவிடீர்கள். காவலர் ஒருவர் எடுத்து கொடுத்தார் என கூறியுள்ளார். அந்த அம்மாவிற்கு முகத்தில் அவ்வளவு சந்தோசம், மருந்தினை வாங்கிக்கொண்டு முழு மனதுடன் நன்றி கூறியுள்ளார்.

இந்தநிலையில், அவரது ஹெல்மட் கேமராவில் பதிவாகிய அந்த நிகழ்வை இணையத்தில் வீடியோக பதிவேற்றியுள்ளார். மேலும் தமிழ்நாடு காவலரின் மனிதநேயத்தை அவர் பாராட்டி குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து அந்த இளைஞருக்கும், தமிழ்நாடு காவலருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. உங்களுக்கும் அந்த காவலரையும், இளைஞரையும் பாராட்ட மனமிருந்தால் நன்றி தெரிவியுங்கள்.