1,985 மது பாட்டில்கள்..! நடுகாட்டிற்குள் ஜோராக நடந்த மது விற்பனை.! சுற்றிவளைத்த போலீசார்.Police arrest illegal alcohol sellers near pudukottai

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், ஒருசிலர் ஆங்காங்கே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் சம்பவங்களும் அரங்கேறிவருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆலங்குடியில் குறிப்பிட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் காட்டுப் பகுதியில் மது விற்பனை செய்த இருவரை கைது செய்தனர்.

corono

மேலும், குற்றவாளிகள் கொடுத்த தகவலின்படி ஆண்டிகுளத்தில் இருக்கும் டாஸ்மாக் பார் ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 1,985 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.