ஆட்டம் காட்டும் பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!

ஆட்டம் காட்டும் பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!petrol-diesel-price-in-chennai-HGAZ8B

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தினமும் விலை அதிகரித்து மிக உச்சத்திற்கு சென்ற பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு நாட்களாக எந்த மாற்றமுமின்றி, விற்பனை செய்யப்படுகிறது.

petrol

இந்தநிலையில், பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.90-க்கும், டீசல் சிலை லிட்டர் ரூ.86.31-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை உச்சகட்ட உயர்வால் வாகன ஓட்டிகள் வேதனையடைந்துள்ளனர்.