சற்று ஆறுதல் அளித்த பெட்ரோல் டீசல் விலை.!

சற்று ஆறுதல் அளித்த பெட்ரோல் டீசல் விலை.!



petrol diesel price

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. 

இதனையடுத்து சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடித்து வருகிறது.

petrol

கொரோனா சமயத்தில் நாடு முழுவதும் கடும் நிதிச்சுமை ஏற்பட்ட  நிலையிலும், பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டிருந்தது. இந்தநிலையில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.96ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.79.72 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.