கணவருடன் தகராறு! ஊராட்சிமன்ற தலைவி எடுத்த பகீர் முடிவு! திண்டுக்கல் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்
கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஊராட்சிமன்ற தலைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகா சத்திரபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பிரவீன்குமார் மற்றும் இந்திரா தம்பதியர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் முடிந்தநிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தம்பதியினர் இருவரும் அதேபகுதியில் தென்னை மட்டை நார் கம்பெனி ஒன்றையும் நடத்திவந்துள்ளனர். மேலும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சத்திரபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்பத்தில் பிரச்சனை வெடித்துள்ளது.
இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த இந்திரா தற்கொலை செய்து கொண்டாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஊராட்சிமன்ற தலைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.