தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
#JustIN: செஸ் ஒலிம்பியாட்டில் கொடி அணிவகுப்பை புறக்கணித்த பாகிஸ்தான்..!
செஸ் தொடரில் கொடி அணிவகுப்பை பாகிஸ்தான் புறக்கணித்தது.
இந்தியாவிலேயே முதல் முறையாக சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் இன்று நடைபெறுகிறது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு திறம்பட செய்துள்ளது. இந்நிகழ்வின் தொடக்க விழா சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், செஸ் போட்டியில் கலந்துகொண்டுள்ள 180-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது நாட்டின் கொடியை உலகிற்கு எடுத்துரைக்கும் கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெறும். செஸ் போட்டித்தொடரில் கலந்துகொண்ட பாகிஸ்தான் அணி, கொடி அணிவகுப்பு நிகழ்வை புறக்கணித்துள்ளது. அந்நாட்டின் வீரர்கள் தங்கள் நாட்டின் கொடியை ஏந்தி மட்டுமே சென்றனர். பாகிஸ்தான் அணி அதிகாரபூர்வமாக தனது அணிவகுப்பை புறக்கணித்து இருக்கிறது.