தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத நான்கு மாவட்டங்கள்!



No corona in four district

சீனாவில் இருந்து ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸின் பரவல் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில், கொரோனா காரணமாக இந்தியாவில் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் மூலமாக நோய் பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடையவர்கள் மூலமாக அதிகமாக பரவியது. இதனால் சென்னை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

corona

ஆனாலும் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில், இந்த நான்கு மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.