தமிழகம்

17 வயது சிறுமி பலாத்காரம், 8 மாத கர்ப்பம்.. 60 வயது கிழட்டு காமுகன் வெறிச்செயல்.. தமிழகமே பேரதிர்ச்சி..!

Summary:

17 வயது சிறுமி பலாத்காரம், 8 மாத கர்ப்பம்.. 60 வயது கிழட்டு காமுகன் வெறிச்செயல்.. தமிழகமே பேரதிர்ச்சி..!

11ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியை கர்ப்பமாக்கியதற்காக, 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அடுத்த மேங்கோ ரேஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் சுதாகர் (வயது 60). இவர் அதே பகுதியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி தற்போது 8 மாத கர்ப்பமாக இருக்கிறார்.

தொடர்ந்து மாணவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுவதை கண்ட பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்று மாணவியிடம் கேட்கும்போது, 60 வயது முதியவர் தான் என்று அவர் கூறிய நிலையில், அதிர்ந்த பெற்றோர் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் மாணவியிடம் விசாரணை நடத்தியதில், அவரது கற்பத்திற்கு சுதாகர் தான் காரணம் என்பது உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அத்துடன் மாணவி தற்போது 8 மாத கர்ப்பமாக இருப்பதால், கருவை கலைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், பெற்றோர்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துபோய் நிற்கின்றனர்.


Advertisement