புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நயன்தாரா விவகாரம்: கட்சி மாறிய நடிகர் ராதாரவி; வெளியான பரபரப்பு தகவல்.!
நயன்தாரா நடித்திருந்த கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் நயன்தாரா பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
"நயன்தாரா நல்ல நடிகை. இவ்ளோ நாள் தம் கற்றதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத (தப்பான) செய்தியெல்லாம் இல்லை. அதையும் தாண்டி நிக்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் விட்ருவாங்க. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, சீதாவாகவும் நடிக்கிறாங்க. என்று நயன்தாராவை தாக்கி இரட்டை அர்த்தமுடைய கருத்துக்கள் பலவற்றை தெரிவித்தார்.
ஒரு விழாவில் நயன்தாராவை பற்றி நடிகர் ராதாரவி இவ்வாறு பேசியது ரசிகர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் வட்டாரங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக நடிகர் ராதாரவி மீது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார். இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் ராதாரவி அதிமுகவில் இணைந்துகொண்டார்.