உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட வயயோதிக ஜோடி தூக்கிட்டு தற்கொலை: கணவன் - மனைவியாக விபரீதம்.!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட வயயோதிக ஜோடி தூக்கிட்டு தற்கொலை: கணவன் - மனைவியாக விபரீதம்.!


Namakkal Paramathi Velur Couple Suicide 

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 72). கூலித்தொழிலாளி ஆவார். மனைவி பஞ்சவர்ணம் (வயது 62). தம்பதிகளுக்கு 2 மகன்கள், 1 மகள் இருக்கின்றனர். 

மகள் கொரோனா தொற்றின்போது உயிரிழந்துவிடவே, மகன்கள் இருவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகிறார்கள். இதனால் பரமசிவம், பஞ்சவர்ணம் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

இருவரும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். பஞ்சவர்ணத்திற்கு சர்க்கரை நோய் இருந்ததால், இரண்டு விரல்கள் நீக்கம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

விரல்களை நீக்கிய பின்னர் காயம் வலித்துக்கொண்டு இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் பலனில்லை. இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த வயோதிக ஜோடி, நள்ளிரவு 1 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது. 

காலை வீட்டில் இருவரும் ஜோடியாக தூக்கில் தொங்குவதைக்கண்டு அதிர்ந்துபோன பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.