வேப்பமரத்தில் இருந்து வெளியேறிய பால்..! கூட்டமாக கூடிய மக்கள்.! தூத்துக்குடியில் நடந்த பரபரப்பு சம்பவம்.!

வேப்பமரத்தில் இருந்து பால் வடிகிறது, பனைமரத்தில் இருந்து பால் வடிகிறது இப்படி பல்வேறு செய்திகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கம். இதுபோன்ற சமயங்களில், மரத்தில் பேய் இருப்பதாகவும், மரத்தில் சாமி குடியேறியுள்ளது அதான் பால் வடிகிறது இப்படி பலர் பல்வேறு காரணங்களை கூறுவதும் வழக்கமான ஒன்றுதான்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கருப்பட்டி என்னும் புகுத்தியில் உள்ள சொசைட்டி சாலையின் ஓரத்தில் இருக்கும் வேப்ப மரத்தில் இருந்து இன்று காலை பால் வடிய தொடங்கியதால், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இந்த நிகழ்வை ஆச்சரியாயத்துடன் பார்த்து சென்றனர்.
மேலும், தங்கள் கையில் இருந்த செல்போன் மூலம் இந்த காட்சியை புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து மற்றவர்களுக்கு பகிர சிறிது நேரத்தில் அந்த பகுதியில் கூட்டம் அலைமோத தொடங்கியது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி வைரலாகிவருகிறது.