தமிழகம்

திருமணமாகாத மகன் திடீர் மரணம்! அதிர்ச்சியடைந்த தாய் எடுத்த விபரீத முடிவு.! சோக சம்பவம்.!

Summary:

மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழவந்தாங்கல் பி.வி.நகர் பகுதியை  சேர்ந்தவர் ராம்பிரபு. 32 வயது நிரம்பிய இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு ராம்பிரபு, அமெரிக்காவில் பணியாற்றியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பிறகு அவர் மீண்டும் சென்னை திரும்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது இதயத்தில் இருந்த கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்  ராம்பிரபு. இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ராம் பிரபுவின் வீட்டில் அவரது தாயார் ரமணி என்பவர்  மட்டும் வசித்துவந்த நிலையில்,  திருமணம் ஆகாத தனது மகன் இறந்ததால் அதிர்ச்சி அடைந்த ரமணி, தனது மகன் இறந்த துக்கம் தாங்காமல் வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட ரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பழவந்தாங்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement