2வது மாடியில் இருந்து 6 வயது மகளை வீசி கொலை செய்த கொடூர தாய்! தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!



mom-killed-her-child-3GNPGH

சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம், திருமலை நகர் சக்கரபாணி தெரு விரிவு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சூரியகலா. இவர்களுக்கு ராகவி என்ற 6 வயது மகள் மற்றும் ஒரு ஆண் கைக்குழந்தை உள்ளது. 

ராகவி அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை, ராகவி வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமியை குரோம்பேட்டை அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

child

இதனையடுத்து சிறுமியின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறுமியின் தாய் சூர்யகலா மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடிக்கிப்பிடி விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமியை மாடியில் இருந்து தூக்கி வீசியதாக சூர்யகலா ஒப்புக்கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யகலா சிறுமிக்கு இரண்டாவது தாய் என்பது குறிப்பிடத்தக்கது.