கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
அமைச்சர் பொன்முடிக்கு போன் போட்ட முதலமைச்சர்..! நச்சுன்னு சொன்ன நான்கு வார்த்தைகள்.!

நேற்று அதிகாலை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனை திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற விசாரணைக்கு பிறகு அமைச்சர் பொன்முடியை சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். இந்தநிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்தநிலையில் அமைச்சர் பொன்முடி இன்று அதிகாலை சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.
இதனையடுத்து அமைச்சர் பொன்முடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். பா.ஜ.க. அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் கழகம் துணை நிற்கும் என்று அமைச்சர் பொன்முடியிடம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.