AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
டீ - யில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி பலாத்காரம்.!! பக்கத்து வீட்டுக்காரர் போக்சோவில் கைது.!!
திருப்பூர் கிராமத்தை சேர்ந்த 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை பக்கத்து வீட்டு பாலமுருகன்(36) மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சம்பவம் நடந்த அன்று சிறுமியின் பெற்றோருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் கோவத்தில் சிறுமியின் தந்தை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதனால் சிறுமியின் தாய் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டின் அருகே உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

இதற்கடுத்து வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது பூமாலுரை சேர்ந்த பாலமுருகன் சிறுமிக்கு ஆறுதல் வார்த்தை கூறுவது போல நடித்து தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்ததும் மயங்கி விழுந்த சிறுமியை தனது வீட்டிற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் வீட்டுக்கு வந்த சிறுமிக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரம் தெரியவந்திருக்கிறது.
இதையும் படிங்க: "தாத்தா சிப்ஸு கொடுத்து அப்டி பண்ணினாரு மிஸ்" 2-ம் வகுப்பு குழந்தை சொந்த தாத்தாவால் பாலியல் கொடுமை.!
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் திருப்பூர் கே.வி.ஆர்.நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, பாலமுருகன் கொடுத்த தேநீரை குடித்த பிறகு தனக்கு தலை சுற்றல் ஏற்பட்டதாகவும், பின்னர் அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறினார். இதற்கடுத்து பாலமுருகனை போக்சோவில் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "பாப்பா ட்ரெஸ்ஸ கழட்டி அங்கிள் ஏதோ செய்றாரு..." 8 வயது சிறுமி பலாத்காரம்.!! 44 வயது நபர் கைது.!!