மஹா புயலால் தமிழகத்திற்கு ஆபத்தா? வானிலை ஆய்வுமையம் தகவல்!

மஹா புயலால் தமிழகத்திற்கு ஆபத்தா? வானிலை ஆய்வுமையம் தகவல்!


Meteorological Observatory report about maha cyclone

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளநிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.இந்தநிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவான மஹா புயலால் தமிழகத்தில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்பாக இயக்குநர் புவியரசன் கூறியதாவது, மஹா புயல் தற்போது அரபிக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதால், மஹா புயலால் தமிழகத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லை என தெரிவித்தார். 

maha cyclone

அடுத்த 12 மணி நேரத்தில் மஹா புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறும். வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் வரும் 6 ஆம் தேதி குஜராத்தை நோக்கி அடையும். எனவே இந்த புயலால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன்  தெரிவித்துள்ளார்.