நடு ரோட்டில் நடந்து போன பெண்ணிடம் பைக்கில் சென்ற இளையர்கள் செய்த அட்டூழியம்! வைரல் வீடியோ..!!!



hathras-sikandra-rao-woman-assault-bike-cctv-viral

உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், ஹாத்ராஸ் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. பொது இடத்தில் நடந்து சென்ற பெண்ணை இளைஞர்கள் தாக்கி தப்பியோடிய இந்தச் செயல், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் முன்வைத்துள்ளது.

பைக் இளைஞர்களின் திடீர் தாக்குதல்

ஹாத்ராஸ் (Hathras) மாவட்டம் சிகந்தர ராவ் (Sikandra Rao) நகரில், அமைதியான சாலையில் இரண்டு பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்த் திசையிலிருந்து வேகமாக வந்த பைக்கில் மூன்று இளைஞர்கள் பயணித்தனர். அருகில் வந்தவுடன், நடுவில் அமர்ந்திருந்த நபர் திடீரெனக் கையை நீட்டி, ஒருப் பெண்ணின் கன்னத்தில் பலமாக அறைந்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

CCTV-யில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்

இந்த கொடூரச் சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்குள்ளான பெண் குழப்பத்துடன் திரும்பிப் பார்ப்பதும், இளைஞர்கள் எந்த அச்சமுமின்றி தப்பிச் செல்வதும் வீடியோவில் காணப்படுகிறது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: வேணாம் சார்... வேணாம் சார்! வலியில் கதறும் குழந்தை! கோவை காப்பகத்தில் பெல்டால் அடிச்ச கொடூர சம்பவம்! வீடியோ வெளியாகி பரபரப்பு....

பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

கேமரா பொருத்தப்பட்ட பகுதிலேயே இவ்வளவு துணிச்சலுடன் தாக்குதல் நடத்தியது, பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடும் கவலைகளை எழுப்பியுள்ளது. உள்ளூர்வாசிகள், நகரின் சில பகுதிகளில் இதுபோன்ற கேலி மற்றும் அத்துமீறல் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பெண்களை அவமதித்து தாக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர். சட்டத்தின் பயம் இல்லாத இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.