கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்னின் வீடியோ! எந்த பேராசிரியரின் அறைக்கும் நான் செல்லமாட்டேன்.... டெல்லி பல்கலைக்கழ மாணவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!



delhi-university-student-harassment-reel-video-controve

டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம், மாணவிகள் பாதுகாப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் பொறுப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு ரீல் வீடியோ, பலரிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் குற்றச்சாட்டு

டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் ‘சித்ரா’ என்ற மாணவி, ஒரு குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக பேராசிரியர் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். தான் சந்தித்த மன உளைச்சல் மற்றும் துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்தும் வகையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: என்னால முடியல.. நான் செத்துடுறேன்! கண்ணீர் விட்டு கதறி அழுத BLO அதிகாரி! SIR பணி அழுத்தத்தால் தற்கொலை செய்வதற்கு முன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

ரீல் வீடியோவில் வெளியான தகவல்கள்

அந்த வீடியோவில், மாணவி கண்ணீருடன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சம்பந்தப்பட்ட பேராசிரியரின் அறைக்குச் சென்று பேசுமாறு முதல்வர் கூறியதாகவும், ஆனால் எந்தப் பேராசிரியரின் அறைக்கும் நான் தனியாகச் செல்லமாட்டேன் என்று அவர் உறுதியாக மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்த சர்ச்சை

இந்த ரீல் துறைத் தலைவரின் கவனத்திற்குச் சென்ற பின்னர், அந்த வீடியோவை உடனடியாக நீக்குமாறு மாணவியிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், Instagram Reel பதிவை நீக்க மறுத்து, தனது நிலைப்பாட்டில் சித்ரா உறுதியாக நின்றுள்ளார்.

நீதி கோரும் குரல்கள்

இந்த விவகாரம் குறித்து டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி, மாணவிக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி மற்றும் சமூக வட்டாரங்களில் மாணவி பாதுகாப்பு குறித்த கவலை வெளிப்படையாக முன்வைக்கப்படுகிறது.