வீடியோ காலில் அடிக்கடி பேசிய கணவன்..! மனைவிக்கு வந்த சந்தேகத்தால் அடுக்கடுக்காக வெளிவந்த அந்தரங்க அதிர்ச்சி! 1 இல்ல 2 இல்ல மொத்தம் 27...!!!



mayiladuthurai-man-27-women-video-sale-case-X5L98K

மயிலாடுதுறையில் அண்மையில் திருமணமான 36 வயது அருண் என்பவர், 27 பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்குப் பிறகும் அவர் அடிக்கடி வீடியோ காலில் பேசியதால் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விசாரித்தபோது, பெண்களுடன் அவர் வைத்திருந்த தொடர்புகள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.

வீடியோ கால்களால் மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகம்

திருமணமான பின்னரும் அருண் தொடர்ந்து பலருடன் வீடியோ காலில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது பல பெண்களுடன் அருணுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஒரே நாளில் ஒரே கிராமத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு! 19 வயது புதுப்பெண் வீட்டிலும், 45 வயது பெண் புளிய மரத்திலும் தொங்கிய உடல்! கிருஷ்ணகிரியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!!!

அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்ததாக தகவல்

மனைவி உள்பட பல பெண்களுடன் இருந்த தொடர்புகளை அருண் ரகசியமாக வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த வீடியோக்களை இணையத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் தற்போது போலீஸ் விசாரணையின் கவனத்துக்கு சென்றுள்ளன.

போலீசார் தீவிர விசாரணை

பெண்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோக்கள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டன, அவை இணையத்தில் எங்கு பகிரப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதையும் படிங்க: ஏழை சிருமிகளை குறிவைத்து சீரழித்த தொழிலதிபர்! 13 வயதிலே தொடங்கிய கொடுமை... இப்போ வயது 60...! பெண் உதவியாளரையும் விட்டுவைக்காத வீரமணி.. அடுக்கடுக்காக வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்...!!!