குறைந்த வேகத்தில் மீண்டும் எகிரும் தங்கம் விலை! 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு...!!!
கடந்த சில நாட்களாக சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, மீண்டும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,000 அதிகரித்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.920 உயர்ந்து ரூ.93,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.115 உயர்ந்து ரூ.11,715 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.920 அதிகரித்து ரூ.93,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: வரலாறு காணாத சரிவு! ஒரு சவரன் ரூ.90,000-ஐ நெருங்கிய தங்கம் விலை...! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!!!
கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு சுமார் ரூ.2,000 உயர்ந்துள்ளதால், தங்கம் வாங்க காத்திருந்த நகைப் பிரியர்கள் விலை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.
வெள்ளி விலையில் மாற்றமில்லை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1.75 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சரசரவென சரியும் தங்கம் விலை...! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1880 குறைவு..! வெள்ளி விலையும் குறைந்தது..!!!