இதெல்லாம் வெட்கக்கேடு...! இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவையை... கிழித்தெடுத்த அண்ணாமலை..! வைரலாகும் வீடியோ..!!!
நடிகை திரிஷா அரசியலுக்கு வருவாரா என்ற பேச்சுகள் ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு 'இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை' என்ற புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அமைப்பின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ராஜகோபால் வெளியிட்டுள்ளார். இந்தப் பேரவை தொடங்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் திரிஷா பேரவை தொடக்கம்
'பதவிக்காக அல்ல, தமிழக மக்களின் உரிமைக்காக' என்ற வாசகத்துடன் புதிய அமைப்பின் லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரானதைத் தொடர்ந்து, நடிகை திரிஷாவும் அரசியலில் ஈடுபடக்கூடும் என்ற பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில் இந்தப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்..! இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை தொடக்கம்... அதிரும் அரசியல் களம்..!!!
திரிஷா பேரவை தொடங்கியதை விமர்சித்த அண்ணாமலை
இதற்கிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த We The Leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, திரிஷா பெயரில் பேரவை தொடங்கப்பட்டுள்ளதை விமர்சித்தார். திருநெல்வேலி போன்ற படித்த மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இதுபோன்ற அமைப்புகள் தொடங்கப்படுவது வெட்கக்கேடானது என அவர் கருத்து தெரிவித்தார்.
நடிகர்களின் புகைப்படங்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதும், சில திரைப்படங்களில் நடித்தாலே ஒருவரைத் தலைவராகக் கொண்டாடும் போக்கும் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும் அவர் சாடினார்.
புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக வேண்டும்
தமிழக அரசியலில் சினிமா வசனங்களும், சமூக வலைதளப் பதிவுகளும் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாற்றத்தை விரும்பி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒன்றரை கோடி மக்கள் வாக்களித்ததாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் பழைய அரசியல் கலாச்சாரமே தொடர்வது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார்.
மக்களை மையமாகக் கொண்ட புதிய அரசியல் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார். திரிஷா பேரவை தொடங்கப்பட்ட விவகாரமும், அதற்கு அண்ணாமலை தெரிவித்துள்ள விமர்சனமும் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதமாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிர்ச்சியில் எடப்பாடி! தவெக பக்கம் தாவும் முக்கியப் புள்ளி... கலக்கத்தில் அதிமுக!!!