திடீர் ட்விஸ்ட்..! இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை தொடக்கம்... அதிரும் அரசியல் களம்..!!!



trisha-fan-organization-announced-in-tirunelveli

தமிழக அரசியல் களத்தில் நடிகை திரிஷாவின் பெயர் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலியில் அவருக்காக ‘இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’ தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யுடன் திரிஷாவுக்கு இருக்கும் நட்பு குறித்து அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், புதிய பேரவை அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

திரிஷாவின் பெயரில் அமைப்பு தொடங்கப்படுவது, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

விஜய் - திரிஷா நட்பு தொடர்ந்து பேசுபொருள்

2004-ம் ஆண்டு வெளியான ‘கில்லி’ திரைப்படத்தில் தொடங்கி ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ உள்ளிட்ட படங்களில் விஜய், திரிஷா இணைந்து நடித்தனர். 2023-ம் ஆண்டு வெளியான ‘லியோ’ திரைப்படத்திலும் இருவரும் இணைந்திருந்தனர். திரையுலகில் நீண்டகாலமாக பேசப்பட்ட இவர்களது நட்பு, விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னரும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கோவையில் ரோடு ஷோவில் மாஸ் காட்டிய திரிஷா! அரசியல் எண்ட்ரி எப்போ.? திரிஷாவின் புன்னகைக்கு பின்னால் இருக்கும் ரகசியம்....!!!

விஜய்யின் பதவியேற்பு விழா, சுதந்திர தின விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் இருவரும் பங்கேற்றனர். கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் கார் பந்தய நிகழ்வு மற்றும் நவம்பர் 5-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் வீட்டுத் திருமண வரவேற்பிலும் இருவரும் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

தவெக நிர்வாக விவகாரங்களிலும் திரிஷா பெயர்

தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி மற்றும் ஆட்சி தொடர்பான விவகாரங்களில் திரிஷாவின் பெயர் இடம்பெறுவதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமிக்கு எதிராக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் திரிஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், திருநெல்வேலியில் ‘இளைய புரட்சித் தலைவி’ என்ற பட்டத்துடன் திரிஷாவுக்காக புதிய பேரவை தொடங்கப்பட இருப்பதாக வெளியாகியுள்ள அறிவிப்பு அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரிஷாவின் பெயரில் அமைப்பு உருவாக்கப்படுவது, தமிழக அரசியல் நகர்வுகள் குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: எதிர்பார்ப்புக்கும் பரபரப்புக்கும் மத்தியில் தவெக எம்.எல். ஏக்கள்..! இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! துணை சபாநாயகர் மாற்றம்? திடீர் ட்விஸ்ட்..!!!