மகளின் திருமண சடங்கிள் நடமாடிய தந்தைக்கு நேர்ந்த விபரீதம்..! கனத்த இதயத்தோடு இரவோடு இரவாக மகன் செய்த அந்த காரியம்..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், மகளின் திருமணக் கொண்டாட்டத்தில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். திருமணத்திற்கு முந்தைய சடங்கில் பங்கேற்றபோது ஏற்பட்ட இந்த துயரம் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்தது. இருப்பினும், மகளின் திருமணம் நின்றுவிடக் கூடாது என்பதற்காக குடும்பத்தினர் ஒரு முடிவை எடுத்தனர். தந்தையின் மரணச் செய்தியை மறைத்து, திருமணத்தை இரவோடு இரவாக நடத்தி முடித்துள்ளனர்.
நடனமாடியபோது திடீர் உடல்நலக் குறைவு
உதய்ப்பூரைச் சேர்ந்த சங்கர்லால், தனது மகளின் திருமணத்திற்கு முந்தைய 'பிந்தோரி' ஊர்வலத்தில் உறவினர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக ரிஷப்தேவ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக உதய்ப்பூரில் உள்ள எம்.பி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் சென்றபோது சங்கர்லால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகளின் திருமண மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தினருக்கு அவரது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தந்தையின் மரணத்தை மறைத்து திருமணத்தை நடத்தினர்
சங்கர்லாலின் மரணத்தால் திருமணத்தை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், மகளின் திருமணம் பாதிக்கப்படக் கூடாது என அவரது மகன் மற்றும் உறவினர்கள் முடிவு செய்தனர். சங்கர்லாலின் உடலை மருத்துவமனைப் பிணவறையில் வைத்த அவர்கள், துயரச் செய்தியை மணமகளிடமும் அவரது தாயிடமும் தெரிவிக்காமல் மறைத்தனர்.
தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், தற்போது பேச முடியாத நிலையில் உள்ளதாகவும் மகன் கூறி தாயையும் தங்கையையும் சமாதானப்படுத்தினார். மறுநாள் மதியம் நடைபெறவிருந்த திருமணச் சடங்குகளை அதற்கு முந்தைய இரவே நடத்தி முடிக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர்.
இரவே திருமணச் சடங்குகள் நிறைவு
மணமகன் வீட்டாரை இரவோடு இரவாக வரவழைத்து, திருமணத்துக்கான சம்பிரதாயங்கள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டன. இதையடுத்து, மகள் புகுந்த வீட்டிற்கு வழியனுப்பி வைக்கப்பட்டார்.
திருமணம் முடிந்து மகள் விடைபெற்ற பிறகே, தந்தை சங்கர்லால் உயிரிழந்த செய்தி குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், அவரது இறுதிச் சடங்குகள் கண்ணீர் மல்க நடைபெற்றன. மகளின் திருமண மகிழ்ச்சிக்கு மத்தியில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிர்ச்சி! கிராம திருவிழாவில் ஆசையாக நூடுல்ஸ் சாப்பிட்ட 118 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி! கதறும் பெற்றோர்.!!