சேலம் அருகே பரபரப்பு.. கத்தி முனையில் திருமணமான இளம் பெண் பலாத்காரம்.!



Married women raped in Salem

சேலம் அருகே கத்தி முனையில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பெரியசோரகை பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். திருமணமான இந்த பெண்ணின் கணவர் கடந்த டிசம்பர் 4ம் தேதி வேலைக்கு சென்று விட்டதால், மதிய வேளையில் தனது 2 வயது பெண் குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார்.

Salem

அப்போது, பெரியசோரகை சீரங்கனூரை இருசாகவுண்டன் என்ற இளைஞர் திடீரென வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி இளம் பெண்ணை தனது ஆசை தீர பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

Salem

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இருசாகவுண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.