தலைக்கேறிய மதுபோதை..! கூட அமர்ந்து மது அருந்திய நன்பனை வெட்டி கொலை செய்த நண்பன்..! பரபரப்பு வாக்குமூலம்..!
தலைக்கேறிய மதுபோதை..! கூட அமர்ந்து மது அருந்திய நன்பனை வெட்டி கொலை செய்த நண்பன்..! பரபரப்பு வாக்குமூலம்..!

மதுபோதையில் நபர் ஒருவர் தனது நண்பனை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள புதுசுக்காம்பட்டியை சேர்ந்தவர்கள் நண்பர்களான சிவகுமார் மற்றும் பிரபு. இவர்கள் இருவரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள கண்மாய் ஒன்றில் அமர்ந்து மதுஅருந்தியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் சண்டையாக மாறியநிலையியல் சிவகுமார் பிரபுவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு தான் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து சிவகுமாரை சராமரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து இன்று காலை தனது தந்தையுடன் மேலூர் காவல் நிலையத்திற்கு வந்த பிரபு நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்துள்ளார். பிரபு கூறிய வாக்குமூலத்தை அடுத்து போலீசார் கொலை நடந்த இடத்திற்கு சென்று சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், பிரபு - சிவகுமார் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் பகை இருந்ததாகவும், நண்பர்கள் மூலம் மது அருந்த அழைத்துச்சென்று சிவகுமார் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.