அழகான பெண்களுடன் ஜாலியா இருக்கலாம்..! அவங்களே கால் பண்ணுவாங்க..! ஆசையாக இருந்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

அழகான பெண்களுடன் ஜாலியா இருக்கலாம்..! அவங்களே கால் பண்ணுவாங்க..! ஆசையாக இருந்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!


man-cheated-using-google-pay

ஆன்லைன் ஆப் மூலமாக இளம் பெண்களுடன் டேட்டிங் செல்லலாம் என கூறி இளைஞர் ஒருவர் பலரிடம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், லோகாண்டோ என்ற ஆப் மூலமாக இளம் பெண்களுடன் டேட்டிங் செய்ய ஏற்பட்டு செய்வதாக கூறி தன்னிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக கூறியுள்ளார்.

அந்த ஆப்பில், அழகான இளம் பெண்களின் புகைப்படத்தை தன்னிடம் காட்டி, அவர்களுடன் நெருக்கமாக இருக்கவேண்டும் என்றால் Google pay மூலம் தனக்கு முன்பணம் செலுத்துமாறு அவர் கூறியதாகவும், அவர் கூறியதை நம்பி நானும் பணம் செலுத்தினேன், ஆனால், அவர் சொன்னபடி எந்த பெண்ணும் தன்னை தொடர்புகொள்ளவில்லை என்றும், இதுகுறித்து பணம் பெற்ற நபரிடம் கேட்டபோது, போலீசில் தன் மீது புகார் கொடுப்பதாக மிரட்டி வருகிறார் எனவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.

Crime

இளைஞர் கொடுத்த புகார் மற்றும் Google pay எண்ணை வைத்து திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்த ரீகன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அழகான பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து, அந்த புகைப்படங்களை காட்டி ரீகன் பல இளைஞர்களிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

ரீகனை கைது செய்துள்ள போலீசார் ரீகன் போன்று ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.