தமிழகம்

கீழே காவல் இருந்த காவலாளி கணவன்..! மாடிக்கு சென்று மனைவியை கற்பழித்த பால் சப்ளை பாய்.!

Summary:

Man abused watchman wife at chennai anna nagar

கணவன் காவலாளியாக வேலை பார்க்கும் அதே குடியிருப்பில், அவரது மனைவி மர்மநபர் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் நேபாளத்தை சேர்ந்த நபர் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்துவருகிறார். மேலும், அதே அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் தனது மனைவியுடன் அவர் தங்கியுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காவலாளி அசதியில் கேட்டின் முன் அமர்ந்து தூங்கியுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நபர் ஒருவர் பால் பாக்கெட் போடுவதுபோல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளே நுழைந்து ஓவ்வொரு வீடாக நோட்டமிட்டுள்ளார். பின்னர் குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்ற அந்த நபர் காவலாளியின் மனைவி தனியாக இருப்பதை பார்த்து அவரை மிரட்டி அவருடன் உறவு கொண்டுள்ளார்.

பின்னர் அந்த மர்மநபர் அங்கிருந்து சென்றதும், காவலாளியின் மனைவி நடந்த சம்பவம் பற்றி கணவரிடம் கூறியுள்ளார். பதறிப்போன அவர், அங்கிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் அந்த பகுதியில் நடமாடியதை உறுதி செய்து பின்னர் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CCTV காட்சியகளை பார்த்த போலீசார், இதுகுறித்து நடத்திய விசாரணையில் சென்னை  அமிஞ்சிகரை யில் அமைந்துள்ள கக்கன்ஜி நகர் எனும் இடத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரே இந்த தகாத செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அவர் வீடு வீடாக சென்று பால் பாக்கெட் போடும் பணி செய்தது தெரியவந்தது. தற்போது ராமகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். 


Advertisement