தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டம்; ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது டிஜிட்டல் வருகை பதிவு..!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு, ஒரு ஆண்டுக்கு "100 நாள் வேலை" மத்திய அரசால் வழங்கப்படும். இந்த திட்டம் முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசால் கொண்டுவரப்பட்டது.
இந்த திட்டம் தற்பொழுது வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ரூ. 214 ரூபாய் விதம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாளேடுகளில் வருகை பதிவை பதிவிட்டு வந்தனர்.
தற்சமயம் ஜனவரி 1 முதல் தொழிலாளர்களின் வருகை பதிவை "டிஜிட்டல் முறையில் பதிவு" செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பதிவை நடைமுறைக்கு உட்படுத்தப்படும் முதற்கட்ட பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது.
இந்த டிஜிட்டல் வருகை பதிவு மொபைல் மூலம் பதிவேற்றம் செய்யலாம். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மூலம் பல முறைகேடுகள் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.