சரக்கடித்து தகராறு செய்த மகனை கொன்று, உடலை எரித்த பெற்றோர்.. மதுரையில் பரபரப்பு சம்பவம்.!
குடித்துவிட்டு தினமும் ரகளை செய்த மகனை பெற்ற தாய் தந்தையே அடித்துக்கொலை செய்து உடலை எரித்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை நகரில் உள்ள ஆரப்பாளையம் வைகையாற்று கரையில் அடையாளம் தெரியாத இளைஞரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக கரிமேடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை கண்காணிகையில், ஆரப்பாளையம் மறவர் தெருவை சேர்ந்த தம்பதி, மர்ம பொருளை சாக்கு மூட்டையில் சைக்கிளில் வைத்து சென்ற காட்சிகள் பதிவானது. இதனையடுத்து, கொலை செய்யப்பட்டவர் மணிமாறன் (வயது 42) என்பது உறுதியானது.
மணிமாறனுக்கு திருமணம் முடிந்து 3 பிள்ளைகள் உள்ள நிலையில், அவரின் மதுப்பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் தாய் - தந்தையுடன் வசித்து வந்த மணிமாறன், அடிக்கடி பெற்றோரிடம் போதையில் சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல இரவு குடித்துவிட்டு வந்து தகராறு செய்த நிலையில், தந்தை முருகேசன் மற்றும் தாய் கிருஷ்ணவேணி மகனை அடித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர், உடலை சாக்கில் கட்டி சைக்கிளில் எடுத்து சென்று, ஆரப்பாளையம் வைகை ஆற்று பகுதியில் போட்டு எரித்துள்ளனர். மகனை கொலை செய்த தாய் - தந்தையை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்,