என்னை மிரட்டி 2 பெண்கள் சீட்டு வாங்கினர்.! தனியார் கல்லூரி விழாவில் பேசிய அமைச்சர் கே.என். நேரு.!

என்னை மிரட்டி 2 பெண்கள் சீட்டு வாங்கினர்.! தனியார் கல்லூரி விழாவில் பேசிய அமைச்சர் கே.என். நேரு.!



Kn Nehru speech in college function

திருச்சிக்கு பெருமை சேர்க்கும் கல்லூரிகளில் ஒன்றான ஹோலிகிராஸ் கல்லூரி தற்போது நூற்றாண்டு விழாக்களில் (1923- 2023) அடியெடுத்து வைத்துள்ளது. நேற்று 10.08.2022 ஹோலி கிராஸ் கல்லூரியில் நூற்றாண்டு ஆண்டு தொடக்க விழா ‌ நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஹோலி கிராஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் மேயர்கள் சுஜாதா மற்றும் சாருபாலாதொண்டைமான் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கே.என்.நேரு, நூற்றாண்டு கண்ட கல்லூரி என்ற பெருமையை கொண்டது ஹோலி கிராஸ் கல்லூரி. 50 ஆண்டுகளுக்கு முன்பு இதைச் சுற்றி மூன்று கல்லூரிகள் மட்டுமே இருந்தது. எனக்கு முன் பேசிய முன்னாள் மேயர்கள் சுஜாதா மற்றும் சாருபாலா தொண்டைமான் பணிவு, ஒழுக்கத்தில் சிறந்த கல்லூரி என பேசினர். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் இவர்கள் இருவரும் என்னை மிரட்டி சீட்டு வாங்கினார்கள் என பேசினார்.

அமைச்சர் அவ்வாறு கூறியதும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் சிரித்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர், என்னுடைய மகளும் இந்த கல்லூரியில் தான் பயின்றார். நடுத்தர மக்களுக்கும், பெண்களுக்கு பாதுகாப்பான சிறந்த இடமாக உள்ளது ஹோலி கிராஸ் கல்லூரி. தொடர்ந்து சிறந்த கல்வியை கொடுத்து உதவி வரும் ஹோலி கிராஸ் கல்லூரி 101வது ஆண்டு விழாவில் நிச்சயம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பேன் என தெரிவித்தார்.