காதலில் உண்மையும் ரொமான்ஸில் தூள் கிளப்பும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்! யார் யார்ன்னு நீங்களே பாருங்க...



best-romantic-zodiac-sign-men

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒரு நபரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கை முறையை பெரிதும் தாக்கும். குறிப்பாக காதல் வாழ்க்கை, நிதி நிலை, மற்றும் பண்பியல் குணாதிசயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவில், காதலில் நிபுணர்களாக கருதப்படும் முக்கியமான மூன்று ஆண் ராசிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரிஷபம் ராசி ஆண்கள்

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள், சுக்கிரன் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பதால், காதல் மற்றும் திருமணத்திற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவர்கள் தங்களின் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்தும் திறன் உடையவர்கள்.

இதையும் படிங்க: செல்வம், சகல சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் கற்றாழை செடி! வீட்டில் எந்த திசையில் வைக்கணும்! இந்த திசையில் மட்டும் வைக்கவே கூடாதாம்!

அவர்கள்,

துணையை கவரும் வித்தைகளை நன்கு தெரிந்தவர்கள்

காதலில் மிகுந்த நேர்மையும் உண்மையும் கொண்டவர்கள்

துணையின் மகிழ்ச்சியே முக்கிய இலக்காகக் கொள்வார்கள்

இவர்களின் காதல் பாணி மற்ற பெண்கள் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

துலாம் ராசி ஆண்கள்

துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் சமநிலை, அமைதி மற்றும் நீதியை விரும்பும் பண்புடையவர்கள். காதலில் உணர்ச்சி பூர்வமாக செயல்படுவார்கள்.

ரொமான்ஸ் செய்யும் திறனில் கிறுக்கர்கள்

பிரிந்து போன உறவுகளையும், மென்மையான பேச்சால் மீட்டெடுக்கும் திறன் உள்ளவர்கள்

பெண்களை மதித்து, பூ போல அணுகும் எண்ணம் கொண்டவர்கள்

இவர்கள் இயல்பாகவே பரிபூரண காதலர்களாக காணப்படுவார்கள்.

சிம்மம் ராசி ஆண்கள்

சிம்ம ராசி ஆண்கள், சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் தம்மில் ஒரு காந்ததன்மை கொண்டிருப்பார்கள். பெண்களை ஈர்க்கும் ஆற்றலில் இவர்களுக்கு போட்டி யாரும் இருக்க முடியாது.

பெரிய காதல் வெளிப்பாடுகளுக்கு பிரபலமானவர்கள்

துணைக்காக எதையும் செய்யக் கூடியவர்கள்

அவர்களின் காதல் பாணி சினிமா கதாபாத்திரங்களை போன்றிருக்கும்

இந்த ராசி ஆண்களை காதலனாக பெறுபவர்கள் உண்மையாகவே அதிர்ஷ்டசாலிகள் என்று கூறலாம்.

இதையும் படிங்க: கோவில் திருவிழாக்கள் ஏன் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது.?! இது தான் காரணமா.?!