செல்வம், சகல சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் கற்றாழை செடி! வீட்டில் எந்த திசையில் வைக்கணும்! இந்த திசையில் மட்டும் வைக்கவே கூடாதாம்!



best-direction-for-aloe-vera-plant-in-home

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கற்றாழை செடி வைத்திருப்பது மிகுந்த மங்களம் அளிக்கக் கூடியது. இந்த செடி வீட்டுக்கு செல்வம், சகல சௌபாக்கியங்களையும் தரும் என நம்பப்படுகிறது.

கற்றாழை செடியை நடும் முன் கவனிக்க வேண்டியவை

கற்றாழை செடியின் பலன்களை முழுமையாக பெற, அதனை சரியான திசையில் நடுவது மிகவும் முக்கியம். தவறான திசையில் வைப்பது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் என்பதால் வாஸ்து நிபுணர்கள் வழங்கும் வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும்.

கிழக்கு திசை கற்றாழைக்கு ஏற்ற திசை

கற்றாழை செடியை கிழக்கு திசையில் வைப்பது மிகவும் சிறந்தது. இந்த திசை லட்சுமி தேவியின் வருகையை குறிக்கிறது. இதனால் வீட்டில் மன அமைதி, நல்ல உடல்நிலை, மற்றும் பொருளாதார மேம்பாடு ஏற்படுகிறது

இதையும் படிங்க: வீட்டில் விஷப்பாம்புகள் நுழைய கூடாதா? இந்த நான்கு பொருட்கள் வீட்டில் இருந்தா போதும்! எட்டிக்கூட பார்க்காது...

மற்ற திசைகளில் கிடைக்கும் பலன்கள்

வடக்கு அல்லது கிழக்கு திசை – நேர்மறை ஆற்றலை தூண்டும்

மேற்கு திசை – பதவி உயர்வு, வாழ்க்கை முன்னேற்றம்

தென்கிழக்கு மூலை – வருமானம் அதிகரிக்கும்

கற்றாழை செடியை வீட்டில் எங்கு வைக்கலாம்

கற்றாழையை பால்கனி பகுதியில் வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல்களைக் குடியிருப்பில் நுழையாமல் தடுக்க முடியும். மேலும், உடல்நல குறைவால் அவதிப்படுவோர் தங்களது படுக்கையறையிலும் இந்த செடியை வைத்துக்கொள்ளலாம். இது ஆரோக்கியத்துக்கும் ஆதரவாகும்.

வைக்கக் கூடாத தவறான திசை

வடமேற்கு திசை என்பது கற்றாழை செடியை வைக்க முற்றிலும் தவிர்க்க வேண்டிய திசை ஆகும். வாஸ்து பரிபாட்டின் படி, இது நிதி நெருக்கடிகள், அசுபம், மற்றும் சிக்கலான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது. ஆகவே இந்த திசையை தவிர்ப்பது மிக முக்கியம்.

 

 

இதையும் படிங்க: உலகிலேயே உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா?