மயானத்தில் ரௌடிக்கு ஸ்கெட்ச்.. முகம் சிதைத்து கொடூர கொலை ஏன்? பரபரக்க வைக்கும் தகவல்.! 



Kelambakkam Rowdy Murder: Face Smashed in Cemetery, Shocking Revenge Plot Revealed

மயானத்தில் ரௌடி முகம் சிதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

முகம் சிதைத்து கொலை: 

சென்னையில் உள்ள கேளம்பாக்கம், கே.எஸ்.எஸ். நகர் பகுதியில் கேளம்பாக்கம் மயானம் உள்ளது. நேற்று காலை சுமார் 7 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இயற்கை உபாதையை கழிக்க அப்பகுதிக்குச் சென்றபோது, ஒருவர் முகம் சிதைத்து கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: நாம பழகினப்போ எடுத்த போட்டோவை லீக் பண்ணிடுவேன்.. Ex-ஐ மிரட்டிய இளைஞர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.! 

விசாரணை:

தகவலை அறிந்ததும் நேரில் வந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கேளம்பாக்கம் ஜோதி நகரில் வசித்து வரும் ஷாகுல் அமீது (வயது 27) என்பது தெரியவந்தது. இவரின் மீது கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை என பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 20 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ஷாகுல் கிரேட் ஏ 1 ரௌடி பட்டியலில் இருக்கிறார். 

ஜாமீன்: 

கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரௌடி ஒருவருடன் கூட்டாளியாக இருந்தவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை வழக்கில் சிறைக்குச் சென்றவர், வெள்ளிக்கிழமை மாலையில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். பின் சனிக்கிழமை நண்பர்களுடன் மதுபானம் அருந்திவிட்டு ஊரைச்சுற்றி வந்துள்ளார். பின் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

chennai

கைது:  

கொலை செய்யப்பட்ட சாகுலின் தந்தை முன்னதாகவே இயற்கை எய்திவிட்டார். தாய் & சகோதரிகளுடன் வசித்து வந்தவர், குற்றச்செயலில் ஈடுபட்டதால் இறுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்குப்பின் ஷாக்களை கொலை செய்ததாக தையூர் பாரதி நகரில் வசித்து வரும் வீரன் என்பவரின் மகன் அருண் (வயது 31), சூர்யா (வயது 32), ஸ்ரீகாந்த் (வயது 36), அப்துல் ரஹ்மான் (வயது 25) ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். அஜய் என்பவருக்கு வலைவீசப்பட்டுள்ளது. 

பழிக்குப்பழி? 

கொளத்தூர் ரௌடியுடன் ஷாகுல் அமீது நட்பு வட்டாரத்தில் இருந்தபோது நடந்த கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக கொலை நடந்ததா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. இந்த கும்பல் ஷாகுலை கொலை செய்ய சபதம் எடுத்து, முகத்தை சிதைத்து கொலை செய்வோம் என முடிவெடுத்து இருந்ததும் தெரியவந்துள்ளது. கொளத்தூர் ரௌடிக்கும் இதனால் வலைவீசப்பட்டுள்ளது. சாகுலின் சகோதரிக்கு வரும் மாதத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், குடும்பத்தினர் குற்றச்செயலில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கி இருக்கின்றனர். இதனை கண்டுகொள்ளாமல் ஷாகுல் கஞ்சா விற்பனையை தொடர்ந்துள்ளார். 

டான்: 

எப்போதும் தன்னை பெரிய நபராக காண்பித்துக்கொள்ளும் ஷாகுல் அமீது, கஞ்சா விற்பனையில் கேளம்பாக்கத்தில் நான் தான் டான் என்பதை இன்ஸ்டாவில் அவ்வப்போது ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் எதிர்தரப்பு கொலை செய்ததா? எனவும் விசாரணை நடக்கிறது. 

இதையும் படிங்க: உன்னோட ஆபாச வீடியோ இருக்கு.. லீக் பண்ணவா? விபரீத முடிவெடுத்த பெண்.. பெண்களே உஷார்.!