நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
நாம பழகினப்போ எடுத்த போட்டோவை லீக் பண்ணிடுவேன்.. Ex-ஐ மிரட்டிய இளைஞர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.!
காதலித்தபோது எடுத்த போட்டோவை வெளியிடுவேன் என மிரட்டி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இன்ஸ்டாகிராம் பழக்கம்:
விழுப்புரத்தில் வசித்து வருபவர் அமீர் சுகேல் (வயது 28). இவர் எலக்ட்ரீஷினியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதையில் ஒவ்வொரு நாளும் சித்ரவதை.. மகனை கொன்று புதைத்த தாய்.. பகீர் சம்பவம்.!
நெருக்கம்:
முதலில் நட்பாக பழகி வந்த இவர்கள், பின்னாளில் நேரடியாக சந்தித்து இருக்கின்றனர். இதனால் நட்பு காதலாக மாறி இருக்கிறது. பெண் திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றிருந்த நிலையில், அமீர் சுகேல் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். வெளிநாட்டில் இருந்தாலும் எப்போதும் காதலியுடன் பேசி வந்துள்ளார்.
புதிய திருமணம்:
காதலன் வெளிநாட்டுக்கு சென்றபின்னர் பெண்ணோ இரண்டாவதாக திருமணம் செய்து புதிய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். மேலும், காதலர் அமீருக்கும் தொடர்புகொண்டு தன்னை மறந்துவிடுமாறு கூறி இருக்கிறார். ஆனால், அமீரோ உன்னை என்னால் மறக்க இயலாது என்றும், என்னுடன் இருந்த தொடர்பை துண்டிக்கக்கூடாது எனவும் வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்தியா வந்தார்..
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த அமீர் சுகேல், காதலியை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இணங்காவிட்டால் முன்னதாக நெருங்கி பழகியபோது எடுத்த ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறார். ஒருசில படங்களை இணையத்திலும் வெளியிட்டதாக தெரியவருகிறது.
பழக்கம்:
அதேபோல, அமீர் சுகேல் வேறு சில பெண்களுடனும் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அமீர் சுகேலை கைது செய்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலன் வீட்டு முன்பு கள்ளக்காதலி கொலை.. அரங்கேறிய வெறிச்செயல்.. பதறிய பொதுமக்கள்.. ஈரோட்டில் சோகம்.!