போதையில் ஒவ்வொரு நாளும் சித்ரவதை.. மகனை கொன்று புதைத்த தாய்.. பகீர் சம்பவம்.! 



Madurai Shocker: Mother Allegedly Kills Son Over Drunken Harassment, Buries Body Near Home

மகனை அடித்துக்கொலை செய்ததாக தாய் வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

போதைப்பழக்கம்: 

மதுரை மாவட்டத்தில் உள்ள வரிச்சியூர், மேட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஐயம்மாள். இவரின் மகன் ராஜா (வயது 32). ராஜா மதுபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. திருமணம் முடிந்து மனைவியுடன் இருந்து வந்த ராஜா, தனது மனைவி மற்றும் குழந்தைகளை மதுப்பழக்கத்தால் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: Madurai News: விமானத்தை பார்க்கும் ஆசையில் பரிதாபமாக பறிபோன உயிர்கள்.. துள்ளத்துடிக்க பலி.! 

குற்றவழக்கு: 

இதனால் ஒருகட்டத்தில் ராஜாவின் மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றுவிட்டனர். ராஜாவின் மீது குற்றவழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. இதனிடையே, கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக ராஜா கடுமையான போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். தாயிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். 

madurai

தகராறு: 

தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்தவர், அவரை தவறான முறையில் நடத்தவும் முறைப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐயம்மாள், தற்காப்புக்காக மகனை கீழே தள்ளி இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

உடல் புதைப்பு: 

மகன் இறந்ததும் வீட்டின் அருகில் கழிவறைக்காக தோண்டியிருந்த பள்ளத்தில் மகனின் உடலை புதைத்த ஐயம்மாள், வீட்டில் இருந்த ரத்தக்கறையையும் சுத்தப்படுத்தி இருக்கிறார். சில மாதங்களாகவே மகனை காணவில்லை என்று கூறி வந்தவர், கிராம மக்களின் சந்தேகத்தால் மனஉளைச்சலடைந்து கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று உண்மையை கூறி சரணடைந்தார்.  

விசாரணைக்கு பின் ஐயம்மாள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

இதையும் படிங்க: #JUSTIN: நொடியில் நடந்த கோர விபத்து.. இளம் தம்பதி, பச்சிளம் பிஞ்சு என 4 பேர் பலி.. மதுரையில் சோகம்.!