நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
இனி கொண்டாட்டம் தான்... செப்டம்பர் 1-ம் தேதி முதல் குடிமகன்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...! அமலுக்கு வரும் அதிரடி லிஸ்ட்...!!!
தமிழ்நாட்டில் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. கடைகளில் எந்தெந்த மதுபான பிராண்டுகள் அதிகம் விற்பனையாகின்றன என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப சரக்குகளை தானாகக் கோரும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் கேட்ட பிராண்ட் கிடைக்காத நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனைக்கு ஏற்ப தானாக உருவாகும் தேவைப் பட்டியல்
தமிழ்நாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்து வருகிறது. 11 நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்களும், 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளும் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க: மொத்தமாக ஆதாரங்களை அள்ளுங்க.... தலைமைச் செயலகத்தில் CM விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!!
கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் நோக்கில் சமீபத்தில் ஆன்லைன் ஆர்டர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட பிராண்டுகள் போதிய அளவில் இருப்பில் இல்லாததால், பல நேரங்களில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத வேறு பிராண்டுகளை வாங்கும் நிலை ஏற்பட்டது.
செப்டம்பர் 1 முதல் புதிய Digital Indent System
இந்தக் குறையைப் போக்கும் வகையில், Digital Indent System எனப்படும் டிஜிட்டல் மற்றும் தானியங்கி தேவைப் பட்டியல் முறையை டாஸ்மாக் நிர்வாகம் செயல்படுத்துகிறது. இதற்காக ஊழியர்களுக்கு வழங்கப்படும் POS/Handheld கருவிகள் மூலம் ஒவ்வொரு கடையின் முந்தைய விற்பனை விவரங்கள் கணக்கிடப்படும்.
அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கடைக்கு எந்தெந்த பிராண்டுகள் எவ்வளவு தேவை என்பதைக் கணினி தானாகக் கணக்கிட்டு, ஆர்டர் பட்டியலை கருவியின் திரையில் காட்டும். இதனால், ஊழியர்கள் தனியாக தேவையை கணக்கிட வேண்டிய நிலையும் குறையும்.
20 சதவீதம் கூடுதல் சரக்கு கோரலாம்
உள்ளூர் விற்பனை நிலவரத்தை கருத்தில் கொண்டு, கணினி பரிந்துரைக்கும் அளவை விட 20 சதவீதம் வரை கூடுதல் சரக்குகளை கடை மேற்பார்வையாளர்கள் கோர முடியும். மேலும், தேவைப் பட்டியலை மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு நேரில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது.
பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் OTP மூலம் ஆர்டர் உடனடியாக உறுதி செய்யப்படும். பின்னர், உறுதி செய்யப்பட்ட ஆர்டர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கிடங்குகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு, கடைகளுக்குத் தேவையான சரக்குகள் விநியோகிக்கப்படும்.
எந்தப் பகுதியில் எந்த பிராண்டுக்கு அதிக தேவை உள்ளது என்பதை விற்பனைத் தரவுகளின் அடிப்படையில் அறிந்து, அதற்கேற்ப இருப்பை பராமரிக்க இந்த புதிய முறை உதவும். இதனால் விருப்பமான பிராண்ட் கிடைக்கவில்லை என்ற வாடிக்கையாளர்களின் நீண்டகால குறை குறையும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... இந்த நாளன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது! தமிழக அரசு அறிவிப்பு!!!