தாய் இறந்த துக்கம் நெஞ்சை அடைக்க, 19 வயது மகள் எடுத்த விபரீத முடிவு.. அனாதையாக தந்தை.!

தாய் இறந்த துக்கம் நெஞ்சை அடைக்க, 19 வயது மகள் எடுத்த விபரீத முடிவு.. அனாதையாக தந்தை.!


Karnataka Mysore Piriyapatna Periyapatna College Girl Suicide

தாயார் இறந்து ஒரு வருடம் ஆகியும், அவரின் மறைவில் இருந்து மீள இயலாமல் தவித்த மகள் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டம் பெரியப்பட்டானா டவுன் பகுதியை சார்ந்தவர் ரக்சிதா (வயது 19). இவர் உன்சூர் நகரில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி 2 ஆம் வருடம் பயின்று வருகிறார். கடந்த வருடத்தில் ரக்சிதாவின் தாயார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார்.

தாயாரின் மறைவு ரக்சிதாவை பெருமளவு துக்கத்தில் ஆழ்த்திய நிலையில், ஒரு வருடம் ஆகியும் அந்த துக்கத்தில் இருந்து ரக்சிதா மீளவில்லை. இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். 

karnataka

இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்ற ரக்சிதா, தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குளியலறையில் இருந்து மகள் நீண்ட நேரமாக வெளியே வராமல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த தந்தை கதவை திறந்து பார்க்கையில், மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

பின்னர், இதுகுறித்து பெரியப்பட்டானா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கல்லூரி மாணவி ரக்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.