ஆத்தாடி..! சொத்து மதிப்பில் ஓபிஎஸ், இபிஎஸ், மு.க.ஸ்டாலினை பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்.!



kamalhasan property value

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ம் தேதி முதல் தொடங்கியது. முதல் நாளில், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் உட்பட, 59 பேர் மனு தாக்கல் செய்தனர். அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக முதலமைச்சர் வேட்பாளருமான மு.க ஸ்டாலின் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முதலமைச்சர் பழனிசாமி தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு 2016-ல் ரூ.3.14 கோடியாக இருந்த அசையும் சொத்து, 2021ல் ரூ.2.01 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல், 2016-ல் ரூ.4.66 கோடியாக இருந்த அசையா சொத்து 2021ல் ரூ. 4.68 கோடியாக உள்ளது.

ops

இதேபோல் வேட்புமனு தாக்கல் செய்த துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் வேட்புமனுவில், அசையும் சொத்து  ரூ.5.19 கோடி எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.2.64 கோடி எனவும். அவரது மனைவி பெயரில் ரூ.10.06 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

            ops

திமுக முதலமைச்சர் வேட்பாளர் மு.க ஸ்டாலின் சொத்து மதிப்பு 4.94 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு 1.17 கோடியாகவும் உள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் 53 லட்சம் மதிப்பில் அசையும் அசையா சொத்துகள் உள்ளதாகவும் ஸ்டாலின் தனது வேட்புமனுவில்  குறிப்பிட்டுள்ளார்.

ops

மக்கள் நீதி மையம் முதல்வர் வேட்பாளர்  கமல்ஹாசனுக்கு 45 கோடியே 9 லட்சம் ரூபாய் அளவில் அசையும் சொத்தும், 131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும் இருப்பதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது. அதோடு அவரது கடன் அளவு 49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 ரூபாயாகும். மொத்தமாக கமல்ஹாசனின் சொத்து மதிப்பு 176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 ரூபாயாக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.