தமிழகம் விளையாட்டு

முதன்முறையாக பிரதமர் மோடி பெயரில் அவிழ்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை.! ஒதுங்கி நின்ற வீரர்கள்.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மங்களாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாபெரு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மங்களாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனையடுத்து மங்களாபுரம் கருப்பர்கோவில் அருகில் உள்ள திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடந்தது. 

அங்கு அனைத்து காளைகளுக்கும் கால்நடை மருத்துவக்குழுவினரால் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பரிேசாதனை செய்து தகுதியானவர்களை வாடிவாசலுக்கு அனுப்பினர். அங்கு 300 மாடுபிடி வீரர்கள் நான்கு அணியாக கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கினர். 

அங்கு நடந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 510 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவரது காளை பிரதமர் மோடியின் பெயரில் அவிழ்க்கப்பட்டது. இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுகளில் பிரதமர் மோடி பெயரில் அவிழ்க்கப்பட்ட முதல் காளை என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.


Advertisement