சூர்யாவுடன் நடிப்பது குறித்து நெகிழ்ந்த இளம் நடிகை.. கண்களை எடுப்பது மிகவும் கடினம்!
டாஸ்மாக் மதுபாட்டிலில் இறந்த வண்டு? குடித்த தொழிலாளிக்கு வாந்தி, மயக்கம்.!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மதுபாட்டிலில் இறந்த நிலையில் வண்டு கிடந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காரம்பவிளை பகுதியைச் சேர்ந்த 44 வயது தொழிலாளி ஒருவர், டாஸ்மாக் கடையில் 3 மதுபாட்டில்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு பாட்டிலை குடித்த பிறகு அவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மற்றொரு மதுபாட்டிலை பார்த்தபோது, அதில் இறந்த நிலையில் வண்டு கிடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: இனி கொண்டாட்டம் தான்... செப்டம்பர் 1-ம் தேதி முதல் குடிமகன்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...! அமலுக்கு வரும் அதிரடி லிஸ்ட்...!!!

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபாட்டிலில் வண்டு இருந்தது மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது தொடர்பாக விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும். இந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் மதுபிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் அதிர்ச்சி.. பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு தொடர் பாலியல் தொல்லை.?