நகைப்பிரியர்களுக்கு ஆறுதல்!.. தங்கம், வெள்ளி விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம்!



Sep 5 gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது. 

சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றத்தினால் தினமும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளதால் பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ரூ.1,13,520-க்கும், ஒரு கிராம் ரூ.14,190-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

silver rate

அதேபோல், வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த விலை குறைவு, நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.